-
Dinamalar
-
கரும்பு கொள்முதல் விலை டன் ரூ.2 ஆயிரம் : 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டிக்ஷனரி' : மதுரையில் அண்ணா பல்கலை.,
சட்டசபை தேர்தலுக்கு முன் முழு அளவில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் என்பதால், எதிர்பார்த்தது போல், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில், பல சலுகைகளும், புதிய அறிவிப்புகளும் தாராளமாக அறிவிக்கப் பட்டு உள்ளன. கரும்பு கொள்முதல், டன் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக உயர்வு, வட்டியில்லா பயிர்க்கடன், அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து, 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பு, திருமண உதவிதொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு, மிளகு, சீரகம், சோம்பு பவுடர்கள், இறக்குமதி சர்க்கரைக்கு வரி விலக்கு, ஜரிகை மீதான கொள்முதல் ...
-
குற்றங்களை ஒப்பு கொண்டான் ஹெட்லி
சிகாகோ : மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான டேவிட் கோல்மேன் ஹெட்லி, தன் னுடைய குற்றங்களை அமெ ரிக்க கோர்ட்டில் ஒப்புக் கொண் டான். இருப்பினும், அவனை இந்தியாவிடம் ஒப்படைப் பதற்கான வாய்ப்பு இல்லை. ஹெட்லிக்கு மரண தண்டனை அளிக்கும்படி அரசு தரப்பில் கோரப்படாததால், அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சிகாகோ கோர்ட்டில் ஆஜராகி, அரை மணி நேரம் குற்றத்தை ஒப்புக் கொண்டான். மும்பை தாக்கு தலில் சம்பந்தப்பட்டது, டென் மார்க் நாட்டின் பத்திரிகை அலு வலகத்தை தாக்க திட்டமிட் டது, வெளிநாட்டு பயங்கர வாதிகளுக்கு ...
-
புழுதி பறக்கும் புதிய வளாகம்: தற்காலிக ஏற்பாடுகள் காரணம்
புதிய சட்டசபைக் கூடம் எப்படி இருக்கிறது என்பதை பார்வையிட, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும், ஆவலுடன் நேற்று சட்டசபை வளாகத்திற்கு படையெடுத்தனர். கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், சட்டசபை வளாகம் முழுவதும் சிமென்ட், மண் ஆகியவற்றால் பெரிய அளவிற்கு தூசு பறப்பது, பெரிய பிரச்னையாக இருக்கிறது.
அரசினர் தோட்ட வளாகத் தில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகத்தை, கடந்த 13ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். வெளியில் இருந்து பார்க்கும்போதே, கட்டுமானப் பணிகள் ...
-
பா.ம.க.,விற்கு எத்தனையோ ஏமாற்றம் : கருணாநிதி கிண்டல்
சென்னை : ''பா.ம.க.,விற்கு எத்தனையோ ஏமாற்றம் இருக்கிறது, அதற்கு நான் என்ன செய்ய முடியும்,'' என, பட்ஜெட் குறித்து பா.ம.க., தெரிவித்த கருத்துக்கு முதல்வர் கருணாநிதி கிண்டலாக பதிலளித்தார்.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்வர் அளித்த பேட்டி:
* முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தங்கள் தரப்பு பிரதிநிதிகளை நியமிக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளதால் மேலும் கால தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?மத்திய அரசை நான் குறை ...
-
தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட கவர்ச்சி பட்ஜெட்: ஜெ., விமர்சனம்
சென்னை : 'சட்டபை பொதுத் தேர்தலை மனதில் வைத்து, விளம்பரத்திற்காக கவர்ச்சித் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன' என, ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலையை, உற்பத்தி திறனை, தொழில் வளர்ச்சியை, மக்கள் நலப் பணிகளை படம் பிடித்துக் காட்டுவது தான் பட்ஜெட். தமிழக அரசின் பட்ஜெட்டை படித்துப் பார்க்கும் போது, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாகத் தெரியவில்லை. சட்டசபை பொதுத் தேர்தலை மனதில் வைத்து, விளம்பரத்திற்காக கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும், ...